மார்த்தாண்டம், ஜூலை 23 –
குமரி மாவட்டம் பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஹிமா லெட்சுமி (16). 11ம் வகுப்பு மாணவி. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிடுவது வழக்கம். இதனை தாயார் மற்றும் சகோதரர் கண்டித்து உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்ததை தாயார் கண்டித்ததால் கோபமடைந்த ஹிமா லட்சுமி இரவில் கதவை பூட்டிவிட்டு அறையில் படுத்து உள்ளார். மறுநாள் நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது ஹிமா லட்சுமி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். பளுகல் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.