திருப்பூர், ஜூலை 22 –
அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் சிண்டிகேட் என்ற சட்ட மையம் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கான அடிப்படை அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை அதிகாரம், சட்ட விழிப்புணர்வு எளிய முறையில் வழங்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் இந்த அமைப்பு துவக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமல் இது பயனுள்ள அமைப்பு என தெரிவித்தார்.
அடுத்ததாக ஏழாம் பொருத்தம் என்ற படம் நடித்து வருவதாகவும் பா. ரஞ்சித் படப்பிடிப்பில் நடந்த விபத்து பாதுகாப்பை மீறி நடந்தது தான். அவர்களும் பாதுகாப்பான முறையில் தான் படப்பிடிப்பு நடத்தினார்கள். அனைவரும் மிக கவனமாக செயல்பட வேண்டும். இது தொடர்பாக அனைவரும் ஆலோசித்து வருகிறோம். அனைவரும் நடிக்க ஆசைப்படுகிறார்கள். இதில் யூடியூப், கூத்து பட்டறை என வித்தியாசம் கிடையாது. திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. விமர்சனம் இல்லாத துறை கிடையாது. விமர்சனங்களை சரி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.