சேலம், ஜூலை 19 –
சேலத்தில் கல்வி கண் திறந்த காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் இரண்டாவது அக்கிரகாரத்தில் உள்ள காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாகிர் அம்மா பாளையத்தில் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகரப் பொருளாளர் தாரை ராஜ கணபதி, துணை மேயர் சாரதா தேவி, மாநகர துணை தலைவர்கள் திருமுருகன், கோபி, குமரன், ஈஸ்வரி வரதராஜு, சேவாதால பிரிவு வெங்கட்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பச்சைப்பட்டி பழனி, சாணவாஸ், மாநகர பொது செயலாளர்கள் வக்கீல் கார்த்தி, சாதிக் பாஷா, சவுக்கதலி, தேவராஜன், விவசாய பிரிவு மாநகர் தலைவர் சிவகுமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது, கோவிந்தராஜ், ராமன், நாகராஜ், கந்தசாமி, நடராஜ், மோகன், கறிக்கடை ராஜா, கிருஷ்ணன், மாநகர செயலாளர்கள் மிட்டாய் சீனிவாசன், சஞ்சய் காந்தி, மதன், கோவிந்தன், ராஜதுரை, விஜய் ராஜ், பாலாஜி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அரவிந்த், பொதுச் செயலாளர் ரத்தினவேல், பாண்டியன், மணிகண்டன், பிரேம், பூபதி, மனித உரிமை துறை மாநகரத் தலைவர் இர்பான், சிறுபான்மை பிரிவு மாநகர தலைவர் அலாவுதீன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் அஸ்ரபலி, ஜாவித், ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவர் பர்வேஸ், ஓமலூர் வட்டாரம் ஸ்ரீதர், டிவிஷன் தலைவர்கள் மாரியப்பன், மோகன், திருஞானம், புவனேஸ்வரன், பாண்டியன், மகிளா, காங்கிரஸ் புஷ்பா ஆகியோர் கலந்து
கொண்டனர்.