கோவை, ஜூலை 17 –
தமிழ்நாட்டில் காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றிய நமது காமராஜர். மதிய உணவு திட்டம், கட்டாய கல்வி, இலவச சீருடை, பள்ளிகள் தொடங்குவது என தமிழ்நாட்டில் கல்வியில் புரட்சி செய்தவர் காமராஜர். ஏழை மக்களின் நாயகன், இந்தியாவின் கிங் மேக்கர், தமிழ்நாட்டின் கல்வியின் தந்தை, பெருந்தலைவர், கர்மவீரர், பச்சை தமிழன் என நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் காமராஜரின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு சார்பாக கோவை வடகோவையில் உள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட தலைவர் டி. செந்தில் ஆறுமுகம் தலைமையில்
எஸ். பொன்ராஜ் மாவட்ட செயலாளர், எஸ். முத்துக்குமார் மாவட்ட பொருளாளர்
ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். உடன் மாவட்ட சட்ட ஆலோசகர்கள் பரிபால வின்சென்ட், மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.