சேலம், ஜூலை 17 –
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குரால்நத்தம் ஊராட்சியில், கர்ம வீரர் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அதுசமயம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை 15 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கழகச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் MP அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவரது உரையில் பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கும் பெஞ்ச் டெஸ்க் வழங்கப்படும். அதோடு பள்ளியின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பாரப்பட்டி க. சுரேஷ்குமார், ஒன்றிய கழகச் செயலாளர் க. உமாசங்கர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வட்டார அட்மா குழு தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர் சந்திரசேகரன், வட்டாரக் கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். மதிய விருந்துடன் விழா நடைபெற்றது. பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கோ. தெய்வநாயகம் ஒருங்கிணைத்தார் .