திருப்பூர், ஜூலை 16 –
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 2 வார்டு எண் 8-ல் உள்ள கண்ணபிரான் நகர் பகுதியில் புதிய தார் சாலை சிறப்பு நிதி 2025-26ன் கிழ் 3 கோடி மதிப்பீட்டில் 36 தார் சாலை துவக்க விழா பணி நடைபெற்றது.
விழாவினை 8-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி வேலம்மாள் வி.வி.ஜி. காந்தி, மாநகராட்சி அதிகாரிகள் செயற்பொறியாளர் அலாவுதீன், உதவி செயற்பொறியாளர் ஹரி, இளம் பொறியாளர் ரமேஷ் குமார், மாநகராட்சி ஒப்பந்ததாரர் சரஸ்வதி அண்ட் கோ சண்முகசுந்தரம், வி.பி. அண்ட் கோ அழகையன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
3 கோடி மதிப்பீட்டில் போடப்படும் இந்த 36 சாலை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பதால் மாமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஊர் பொதுமக்கள்.