திருமங்கலம், ஜூலை 15 –
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் 10-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சக்தி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் தலைவராக விஜயபாண்டிக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பல்வேறு சேவை திட்டங்களை முன்னாள் மாவட்ட ஆளுநர் கிரியேட்டிவ் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைச்சரவை துணை பொருளாளர் இராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுப்புராஜ், டாக்டர் விமல்குமார், நெட்பிளிக்ஸ் மண்டல தலைவர் பூசைத்துறை, வட்டாரத் தலைவர் இமானுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதனை தொடர்ந்து ரோஸ் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக விஜயபாண்டி, துணை தலைவராக முத்துக்குமார், செயலாளராக பழனிமுத்துக்குமரன், இணை செயலாளராக குருநாத ஈஸ்வரன், பொருளாளராக சுந்தரபாண்டி, பட்டயதலைவராக அனிதா வி. பால்ராஜ், உடனடி முன்னாள் தலைவர் சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் மீனா சிவராஜன், உறுப்பினர் பெருக்கம் தலைவர் வைரமுத்து, பசிப்பிணி போக்குதல் திட்ட இயக்குநர் சுரேஷ் குமார், சேவை திட்ட இயக்குநர் மணிகண்டன், எல்சிஐ ஒருங்கிணைப்பாளர் அருண் குமார், சாலை பாதுகாப்பு திட்ட இயக்குநர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குனர்கள் தினேஷ், கணேசன், மாரியப்பன், விசாலாட்சி பால்ராஜ், விஜயலெட்சுமி வேம்புவேந்தன், சரண்யா வைரமுத்து, இராஜ லெட்சுமி சுந்தரம், கலைச்செல்வி விஜயபாண்டி மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் பட்டயத் தலைவர் அனிதா பால்ராஜ் நன்றி தெரிவித்தார்.