சேலம், ஜூலை 15 –
தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின் நிறுவன தலைவர் திருமலை சேலத்தில் பேட்டி அளித்தார். அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின் நிறுவன தலைவர் திருமலை சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது அவர் கூறும் போது: பார்க்கவ குல சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் அரசுக்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை நடக்கவில்லை. தற்போது திமுக ஆட்சியிலும் கூட எங்கள் சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கடந்த எம்ஜிஆர் காலத்துக்கு பின் இதுவரை எங்கள் சமூகத்திற்கு அமைச்சரவையில் உரிய இடம் இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்போதே அமைச்சரவையில் எங்கள் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வழங்கும் நிலையில் 80 லட்சம் மக்கள் கொண்ட எங்கள் சமூகத்தில் இதுவரை எந்த கட்சியும் கண்டுகொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு எங்கள் மக்கள் ஆதரவு உண்டு. இதை தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிற சமூகத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் சமூகத்திற்கு இதுவரை வழங்கவில்லை. எனவே பார்க்கவ குல சமூகத்திற்கு ஐந்து சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் எங்கள் சமூகத்தில் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தையும் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எங்கள் சமூகத்தை சேர்ந்த சிலர் கடுமையாக தாக்குதல் செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக நீதி என முன்னெடுத்து வருபவர் அவர் சமூகத்தை சேர்ந்தவரை கைது செய்யக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேட்டுக் கொண்டார். இனிவரும் காலங்களில் பார்க்கவகுல சமூக மக்களுக்கு அனைத்திலும் முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.