தக்கலை, ஜூலை 14 –
தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஹோமர்லால் (59) வக்கீல். இவர் தக்கலை காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமும் தபால் மூலமாக ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் குட்டைக்கோடு பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் சுனில் குமார் (46) மற்றும் அவரது மனைவி நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் செல்போனில் தன்னை மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில் பத்மநாபபுரம் நீதிமன்ற அனுமதி உடன் சுனில் குமார் மற்றும் மனைவி இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த பிரச்சனை தொடர்பாக ஆடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்த நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.