தென்காசி, ஜூலை 14 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து சுதந்திரப் போராட்ட வீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அழகுமுத்துகோனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞரணி முகேஷ், மாணவரணி உதயகுமார், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜலால், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைபாண்டியன், வெள்ளத்துரை, பஞ்சாயத்து தலைவர் கணேசன் ஜெயக்குமார், பாலாஜி உள்பட திமுகவினர் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.