கோவை, ஜூலை 10 –
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான (FMSCI) இந்திய தேசிய அளவிலான ரேலி சாம்பியன்ஷிப் தொடர்பாக ஏற்பாடுகளை முறையாக செயல்படுத்த அமைப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் போட்டிக்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், டெக்னிக்கல் மேம்பாடுகள், அதிகாரப்பூர்வ ஒப்புதல்களுக்கான முன்பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
போட்டி நடைபெறும் இடங்களில் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு, அவசரகால மருத்துவ சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறும் என்பதை வலியுறுத்தினர். இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து முன்னணி பைக்கர்கள் மற்றும் கார்கள் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். கோயம்புத்தூர் நகரம் இந்தியாவின் மோட்டார் விளையாட்டு தலைநகராக திகழ்வதை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. போட்டிக்கான தேதி, பதிவு விவரங்கள் மற்றும் பாதை பற்றிய முழுமையான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மோட்டார் வாகன நிர்வாகம் தெரிவித்துள்ளது.