வேலூர், ஜூலை 09 –
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வண்ட்றந்தாங்கல் கிராமம் ஓம் சக்தி ஆலயத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன் மற்றும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை சமேத ஸ்ரீ முல்லைநாதர் சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் யாகசாலை பூஜைகள், கோ பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் மற்றும் கடம் புறப்பாடு விமான கோபுரத்திற்கு மேள, தாளங்கள் முழங்க நன்னீராட்டு பெருவிழாவும் நடைபெற்றது.
இதில் ஐயப்ப குருசாமி கிராம நாட்டாண்மை சண்முகம், சௌரிய சக்கர ஜனாதிபதி விருது பெற்ற கிராம துணை நாட்டாண்மை ரவி, பொருளாளர் தேவகி, ஓம் சக்தி மன்றம் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் சந்திரன் மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.