வேலூர், ஜூலை 07 –
வேலூர் மாவட்டம், வேலூர் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் தாயகம் திரும்பிய மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் டார்லிங் ரெசிடென்சியில் ரெப்கோ வங்கி தலைவர் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இயக்குனர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தாயகம் திரும்பிய மகளிருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார். உடன் வேலூர் கிளை ரெப்கோ வங்கி மேலாளர் விக்னேஷ்வரி, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் மண்டல மேலாளர் காதர்பாஷா, ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதி இளங்கோவன் மற்றும் வங்கி ஊழியர்கள், ரெப்கோ உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.