மார்த்தாண்டம், ஜுலை 4 –
நித்திரவிளை செல்லும் சாலையில் குடப்பள்ளி என்ற பகுதியில் மிகவும் வளைவான சாலை உள்ளது. அந்த இடத்தில் சாய்ந்த மரங்கள் காணப்பட்டது. இந்த மரத்தால் அந்தப் பகுதி வழியாக செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தடுப்பனையில் கிராபர்மேன் போட்டு நிரப்ப பதினாறு சக்கரம் கொண்ட கனரக வாகனங்கள் வந்து செல்வதால் அந்த வாகனங்கள் வரும்போது அந்த சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த மரத்தின் கிளைகள் வீடுகள் மேல் பகுதி வரை சென்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மரத்தை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து கடந்த 15 நாட்களுக்கு மரத்தை வெட்டி அகற்ற வந்திருந்த நெடுஞ்சாலைத் துறையில் 7 எடுத்த நபர் மர கிளைகளை மட்டுமே அகற்றிவிட்டு மரத்தை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் மரம் மட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தும் கடந்த 15 நாட்களாக மரத்தடியாகிட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போக்குவரத்து இடங்களுக்கான அந்த மரத்தின் தடிகளை உடனே வட்டியாகற்ற வேண்டும் என அப்போது இனர் கோரிக்கை விடுத்துள்ளனர்.