மதுரை, ஜூலை 04 –
மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளுக்கு மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் தலைமையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கீர்த்திகா தங்கபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட ஒன்றிய நகர மற்றும் பேரூர் பகுதி புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி சார்பாக நலத்திட்டங்களை தெற்கு மாவட்ட செயலாளர் வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி தங்கபாண்டியன் தனபாலன் சண்முகம் மற்றும் பகுதி செயலர் விசிலை சிவா மாமன்ற உறுப்பினர்கள் காளிதாஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.