இராமேஸ்வரம், ஜூலை 03 –
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம் இணை ஆணையர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை சார்ந்த திருக்கோயிலில் இலவச திருமண திட்டம் கடந்தாண்டு முதல் தமிழக மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ராமநாதசுவாமி கோவிலில் சத்யா நகர் பகுதியில் சேர்ந்த வேல்முருகன்-சந்திகா, ஒண்டிவீரன் நகர் முனீஸ்வரன்-காளீஸ்வரி ஆகியோருக்கு இலவச திருமணம் அம்பாள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இலவச திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 4 கிராம் தங்கம் உள்ளிட்ட 70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் திருக்கோவில் நிர்வாகத்தார் வழங்கினர். இதில் நகர்மன்ற தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையர் ரவீந்திரன், செயல் அலுவலர் முத்துச்சாமி, மேலாளர் வெங்கடேசன், வட்டாட்சியர் அப்துல் ஜபார், பேஷ் கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, நாகராஜ், முனியசாமி, பொதுமக்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.