ஈரோடு, ஜூலை 2 –
தமிழக மக்கள் கட்சி தலைவர் கோபால் கிருஷ்ணன் தலைமையில் ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த மாசுக்கட்டுப்பாட்டு துறை என்ஜினீயர் ராஜ் குமார், உதவி அதிகாரி தீன தயாளன், தாலுகா மண்டல துணை தாசில்தார் செல்வம், வருவாய் அலுவலர் சுல்தான் பேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்தினர்.
அப்போது மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வாய்க்காலில் உள்ள தண்ணீரை ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முன்பு ஆய்வு செய்தனர். அப்போது வாய்க்கால் தண்ணீரில் கழிவு நீர் எதுவும் கலக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் வாய்க்காலில் சாய தண்ணீர் எதுவும் கலக்கவில்லை என்பது நிரூபனமாகி உள்ளது. இருப்பினும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.