நாகர்கோவில், ஜூலை 2 –
துணை சுகாதார மையங்களில் எம்எல்எச்பி பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்களான எம்எல்எச்பி -க்களை தடுப்பூதி பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கு விரைவாக முடிவிற்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள 4 ஆயிரம் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு சுகாதார நிலையங்களில் துணை செவிலியர் பணி நியமனம் மிக அவசியம். எனவே, துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்வது கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று பெருந்திரள் முறையீடு நடந்தது. மாவட்ட தலைவர் ஜாஸ்மின் சுஜா தலைமை வகித்தார். செயலாளர் நிர்மலா மேரி, துணைத் தலைவர் ஜீவா செல்வின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.