சோழவந்தான், ஜூன் 28 –
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். மருத்துவர் அணி பாலகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் டாக்டர் கருப்பையா வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.வி. கருப்பையா மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி. ராஜா, மகளிர் அணி லெட்சுமி, வனிதா, சாந்தி, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில, மாவட்ட அணி நிர்வாகிகள் துரை தன்ராஜ்சிவசக்தி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் சேர்மன் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், பேரூர் துணைச் செயலாளர் தியாகு, பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கருப்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து இளைஞர் அணி கேபிள் மணி நன்றியுரை ஆற்றினார்.