மதுரை, ஜூன் 28 –
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் விஜய் அன்பன் கல்லானை ஆகியோர் தலைமையில் மதுரை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் அலாவுதீன் ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் மாத்தூர், அரும்பனூர், குருத்தூர், செட்டிகுளம், கள்ளந்திரி, கண்ட முத்துபட்டு ஆகிய இடங்களில் உள்ள 1000 மேற்பட்ட அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், நோட்புக் மற்றும் பள்ளி உபகரண பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது பிரகாஷ், Dr. தீபன் சக்கரவர்த்தி, இம்ரான் கான் ரஞ்சித், சேகர், பொன்னர், அஜித், கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.