தென்தாமரைகுளம், ஜூன் 28 –
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி கடற்படை சார்பில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் டாக்டர் ற்றி. கலைவாணி வரவேற்று பேசினார். வணிகவியல் துறை தலைவர் டாக்டர் ஆர். தர்ம ரஜினி, என்.சி.சி அதிகாரி டாக்டர் பிரபு மாறச்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சமூக செயற்பாட்டாளர் டாக்டர் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். முடிவில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் டாக்டர் சிவபாலன் நன்றி கூறினார். கருத்தரங்கில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.