நாகர்கோவில், ஜூன் 28 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025 – 2026 நிதியாண்டிற்காக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான இயந்திரங்கள் வாங்கும்போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000 மானிய தொகையாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று அளிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ. 1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆகவே பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை 23-6-2025 முதல் 14-7-2025 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.