கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 87-ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 1143 ஏரிகளும் உள்ளன. இதனைத் தவிர 4 பெரிய அணைகளும், பாரூர் பெரிய ஏரியும் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. இவற்றுள் இரண்டு அணைகள், பாரூர் பெரிய ஏரி மற்றும் 41 ஏரிகள் தற்போது பெய்த மழையினால் முழுவதுமாக நிரம்பியும், 379 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நீர் நிறைந்தும் காணப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் மாணவ, மாணவியர் விளையாடவும், நீச்சல் பழகவும், குளிக்கவும் மேற்கண்ட நீர் நிலைகளுக்கு தனியே செல்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே அனைத்து மாணவ, மாணவிகளும் இது போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை நீர் நிலைக்கு அருகில் விளையாட அனுமதிக்க வேண்டாம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ்குமார், அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீர் நிலைகளில், சிறுவர்கள், மாணவ,மாணவிகள் விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics