காஞ்சிபுரம் மே 20
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுரவு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் திருபெரும்புதூர் ஒன்றியம்,வெங்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அன்னக்கிளி உலகநாதன், அப்பகுதி பொதுமக்களின் நலனுக்காக மூன்று கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
அதில் முதல் மனுவில் கலைஞர் வீடு திட்டத்திற்கு வெங்காடு ஊராட்சியில் நலிவடைந்த பொது மக்களுக்கு வழங்குமாறு கோரிக்கை மனுவும், மற்றொரு மனுவில் திருப்பெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சி சிப்காடில் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மூன்றாவது மனுவில் வெங்காடு ஊராட்சி சுற்றி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைந்துள்ளதால், பள்ளி குழந்தைகள் மற்றும் இருளர்கள் விளையாட இடம் இல்லாமல் அவதி பெறுவதால், விளையாட்டு மைதானம் வேண்டி ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும், தற்போது சிப்காட் நிறுவனத்திடம் இருந்து விளையாட்டு மைதானம் அமைக்க இடம் ஒதுக்க ஆவணம் செய்து தருமாறும் கோரிக்கை மனு வழங்கினார்.