உசிலம்பட்டி. 19
மதுரை, மாவட்டம்
உசிலம்பட்டியில் ஆப்ரேசன் சிந்தூர் மூலம் நீதியை நிலை
நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்
பாஜக மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் மூவர்ண கோடி பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர வைத்து நீதியை நிலை நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பாஜக மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மூவர்ண கொடி பேரணி
உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து துவங்கிய இந்த பேரணியை பாஜக மேற்கு மாவட்டத்
தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்பராணி, மாவட்ட செயலாளர் தீபன் முத்தையா, தொழில் முனைவோர் பிரிவு மாவட்டத்
தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியானது
மதுரை ரோடு, தேவர் சிலை வழியாக சென்ற போது
பாரத தாய் மற்றும் நேதாஜி வேடமிட்டு பேரணியில் நடந்து வந்த
இரு குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
மதுரை மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு
பாரத பிரதமருக்கும், இந்திய இராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து கோசங்களை எழுப்பி ஊர்வலமாக
தேனி ரோடு முருகன் கோவில் வரை சென்று நிறைவு பெற்றது.