சுசீந்திரம்.மே.17
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சுசீந்திரம் அடுத்த வழக்கம்பாறை செங்கட்டி பாலம் இரு மருங்கிலும் கல் சிற்ப தொழில் செய்யும் வேலை நடைபெறுகிறது இந்த சிற்பக்கூடங்கள் சாலை அருகே உள்ளதால் இயந்திரங்கள் மூலம் சிற்பங்கள் கல் தூண்கள் போன்றவை இயந்திரங்களால் கல்லை பாலிஷ் செய்யும் போது அதிலிருந்து கல் துகள்கள் புகையாக வெளியேறுகின்றது இந்த புகையானது சாலையில் செல்கின்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கண்ணில் பட்டு ஆங்காங்கே சில விபத்துகள் ஏற்படுகின்றது மேலும் நான்கு சக்கர ஓட்டிகள் பேருந்து ஓட்டிகள் ஆகியோர் கண்களிலும் இந்த கல் தூசி பட்டு சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்படுகிறது பொதுமக்கள் கூறும்போது கல் பாலிஷ் செய்யும் போது சாலை அருகே இந்தக் கல் தூசி சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படாமல் இருப்பதற்கு கல்பாலிஸ் செய்யும் இடத்தில் சாலை ஓரத்தில் தார்பாயோ அல்லது மறைப்புகளையோ ஏற்படுத்தி தங்கள் வேலையை செய்தால் கல் தூசி பறந்து போக்குவரத்துக்கு இடையூர் இல்லாமலும் வாகன ஓட்டிகள் கண்ணில் பட்டு முன் வரும் வாகனங்கள் தெரியாமல் மோதி விபத்துகள் ஏற்படமல் தடுக்க முடியும் எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சுசீந்திரம் முதல் வழக்கம்பாறை வரை உள்ள சாலை ஓரத்தில் உள்ள கல் பாலிஷ் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து சாலை ஓரத்தில் மறைப்புகளை ஏற்படுத்தி பெரும் விபத்து ஏற்படும் முன் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்



