சிவகங்கை மாவட்டம், மே 16
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சீருடை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.ரமேஷ்கண்ணன், தாளாளர் (சேது வள்ளியம்மாள்) அறக்கட்டளை கல்வி குழுமம், கண்டரமாணிக்கம்) டாக்டர். சேதுகுமணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.