நாகர்கோவில், மே 15
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நாகர்கோவிலில் 16ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினி பயிற்சி, கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்க நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் துறையில் தேர்வு செய்யப்படும் பதிவு தாரரின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விபரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலை தேடுவோர், வேலை அளிப்பவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.