தருமபுரி மே 15
தருமபுரியில் சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த மே 5ஆம் தேதி குமரி மற்றும் கோவை மாவட்டத்திலிருந்து இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் தொடங்கியது. இருசக்கர பிரச்சார வாகனத்தினர் தருமபுரி நகராட்சி பூங்கா அருகில் வந்து சேர்ந்தனர்.
அப்போது 2003 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது,பணிக்கொடை கிடையாது, குடும்ப ஓய்வூதியம் கிடையாது, திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது.
நான்காண்டுகளாக தமிழக அரசு புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்யாமல் காலம் கடத்தி வருவதாக தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாநில சிறப்புத் தலைவர் பொன்முடி, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், மாநிலத் தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.