தென்தாமரைகுளம் மே 14
லெமூரியா தாய்க் களம் அமைப்பு ஒருங்கிணைந்து பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்ற சித்திரை முழுமதி நாள் ‘அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு பெருவிழா’வில் நாம்தமிழர் கட்சி சார்பாக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர், மாவட்ட தலைவர் தீபக் சாலமோன் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், உட்பட, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள்,சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அய்யாவின் அன்புக்கொடி பக்தர்கள் கலந்து கொள்ள விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டது குறித்து மரிய ஜெனிபர் கூறும் போது :-
சித்திரை முழு நிலவு நாளில் இராஜாக்கமங்கலம் தென்பால் கடற்கரையின் பெருமணல் பரப்பில் இயற்கையோடு ஒன்றி சாதி, மத, பாகுபாடு இல்லாமல் கூடி மகிழ்வுடன் நடந்ந இந்த விழாவில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி
விழாவை ஒருங்கிணைத்த அனைவரும் நன்றிகளும் பாராட்டுகளும் என அவர் தெரிவித்தார்.