தஞ்சாவூர். மே.14
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக காவல் கண்காணிப் பாளர் ராஜாராம் சுடுகாட்டுக்கு சென்று, ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லறக்கம் செய்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், கிழக்கு காவல் நிலையம் எல்லைக் கு உட்பட்ட ஆதரவற்ற அடையாளம் தெரியாத 17 ஆண் சடலங்களும் 5 பெண் சடலங்களும் சேர்த்து மொத்தம் 22 சடலகளை மருத்துவக் கல்லூரி காவல் நிலையம் சார்பில் நல்லடக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. முதல் முறையாக காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தஞ்சை வடக்கு வாசல் ராஜா கோரி சுடுகாட்டிற்கு நேரில் சென்று 22 சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தார்.
நிகழ்வில் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா,மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலைவாணி உதவி ஆய்வாளர் முத்துக்குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமை காவலர்கள் குருமூர்த்தி,அப்துல்லா,சுந்தரமூர்த்தி, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர்.