நாகர்கோவில் மே 14
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பதற்காக மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தலின் படி, நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் வழிகாட்டுதலின்படியும், மாநகர் நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார அலுவலர்கள் ராஜாராம், பகவதி பெருமாள், முருகன், ராஜா ஆகியோர் இணைந்து , சுகாதார மேற்பார்வை சூப்பர்வைய்சர்ஸ் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று நாகர்கோயில் கோட்டார் பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனைை என்பதை காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில் சுமார் 55 கடைகள் முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டதில் சுமார் பத்து கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு கடை 4 34.75 கிலோ அதிகம் தடைப்பட்ட செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்வதை கண்டுபிடித்ததினால் அந்த கடையை மாநகராட்சி மூலம் சீல் வைக்கப்பட்டது அந்த கடைக்கு முதல் தடவை ஆனதால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 9 கடைகளில் 35.50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மதிப்பு சுமார் 5 லட்சம் வரை இருக்கும் என தகவல்.