ராமநாதபுரம், மே 12
அதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 71வது பிறந்தநாள் முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி மற்றும் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் தலைமையில் கழக மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி சார்பாக மகளிரணி செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்லானி சீனிகட்டி மற்றும் வழக்கறிஞர் ஷாமுதீன் ஏற்பாட்டில் வாலாந்தரவை செஸ்ட் ஏஞ்சலின் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜி. முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி ரத்தினம், மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடியாரின் பிறந்த நாளை ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.