திருவாரூர் மே 12
கொரடாச்சேரி மற்றும் வடபாதிமங்கலம் அரசுப்பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் அத்திக்கடை ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திறந்து வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்ட அரசுப்பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் அத்திக்கடை ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திறந்து வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகளையும், கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வடபாதிமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, கொரடாச்சேரி ஒன்றியம், அத்திகடை ஊராட்சியில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினயும் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், கண்காணிப்பு பொறியாளர் பிரான், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு, முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலசந்தர், வட்டாட்சியர் சரவணன், பள்ளி தலைமையாசிரியர் பூந்தமிழ் பாவை, உதவி செயற்பொறியாளர்கள் மலர்செல்வி, சிங்காரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.