தேனி மாவட்டம்
சின்னமனூரில் அருள்மிகு சுயம்பு பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி
அம்மன் திருக்கோயில் அறநிலையத்து றையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
இக்கோயில் சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதற்காக 18 மண்டகப் படிகாரகளின் உபயத்தில்
இத்திருவிழா மிகுந்த ஆன்மீகமாக.
நாட்டின் மக்கள் மற்றும் விவசாயம் குடிநீர் வளர்ச்சிக்காக
நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்
17 ஆண்டுகளைக் கடந்து இரண்டு ஆண்டுகளாக இத்திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனால் நடப்பாண்டிற்கு சித்திரை பெருந்திருவிழா கொண்டாடுவதற்கு முன்னதாக கடந்த மாதம் 28 ஆம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழாவிற்கான முன்னோட்டப் பணிகளை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து
மே மாதம் முதல் தேதியில் சித்திரை பெருந்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி 18 நாள் திருவிழாவாக துவக்கப்பட்டு
திருவிழா நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் 8 வது நாளில் பூ லாந்தீஸ்வரருக்கும், சிவகாமி அம்மனுக்கும், பிரியாவிடைக்கும் திருக் கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக
நடைபெற்றது.
சுவாமியை பல்லக்கில் ஏற்றி திருத்தேருக்கு எடுத்துச் சென்று
நேற்று 9 வது நாளில் மாலை 5.15 மணி அளவில் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டு தயாரில் வைத்திருந்த தேருக்கு முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து கொண்ட குழுவினருடன் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதில் பொதுமக்களும் பக்தர்களும் தேரடியில் இருந்து தேரினை பிடித்து இழுத்து செக்கா முக்கு நடுத்தெரு வழியாக
கண்ணாடி முக்கில் பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக
கண்ணாடி மூக்கிலிருந்து சீப்பாலக்
கோட்டை சாலை வழியாக காந்தி சிலை திரும்பி, மெயின் ரோட்டில் மார்க் கையன்கோட்டை ரவுண்டானா கடந்து தேர் நின்ற நிலையில் அடையும்.
அதற்காக நான்கு ரத வீதிகளில்
மின்வாரிய துறையினர் தேர்வருதற்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில்
உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வயர்களை அவிழ்க்கப்பட்டு தடையின்றி தேரோட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த தேரோட்ட நேரத்தில் சின்ன மனூர் நகர்மன்ற தலைவர் அய்யம் மாள் ராமு காயத்ரி பள்ளி தாளாளர் விரியன் சுவாமி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.