தஞ்சாவூர். ஏப்.5.
தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டை சாலை மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங்கில் கூடுதல் தலைமைச் செயலாளர் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் .ஜெ. ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங் கை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து கருத்தரங்க சிறப்பு மலரை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில் ..
மனிதர்களுக்கும் விலங்குகளுக் கும் இடையே அண்மைக்காலமாக ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. வாயில்லா ஜீவன்கள் ஆகிய விலங்குகளுக்கு அரசியலமைப்பு சட்டத்திலேயே சில உரிமைகள் உள்ளன. எனவே விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தெரு நாய், பூனைகளுக்கு உணவு கொடுப்பது மட்டும் அல்லாமல் அதை மக்கள் தத்து எடுப்பதும் அவசியம் .தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி போடப் பட வேண்டும் .பொதுவாக கால்நடைகளின் நடத்தை வளர்ப்போரிடம் ஒரு விதமாகவும், மற்றவர் களிடம் வேறு விதமாகவும் இருக்கும் .இதை கால்நடை வளர்ப்போர் புரிந்து கொண்டு அதை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து வளர்க்க வேண்டும். நாய் ,பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ண ன்
தொடர்ந்து தமிழகத்தில் சிறப்பான முறையில் விலங்கு நல பணிகளை மேற்கொண்டு வரும் 30 நபர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்
அப்போது நாய்களை தத்தெடுத்து விரும்பியவர்களுக்கு தெரு நாய் கள் வழங்கப்பட்டன .மேலும் கருத்தரங்க மலரும் வெளியிடப் பட்டது ..
இக்கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் ,மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தமிழ்நாடு கால்நடை வளர்ச்சி முகமை தலைமைச் செயல் அதிகாரி மருத்துவர் தமிழ் செல்வம் , கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர். பாஸ்கரன் , புதுச்சேரி கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் டாக்டர் லதா மங்கேஷ்கர்,
கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் முதல்வர் மருத்துவர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், யாகப்பா பள்ளி தாளாளர் எட்வர்ட் ஆரோக்கியராஜ் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஞ்சலா சொர்ணமதி , விலங்கு நல அலுவலர்கள் அப்பு பிள்ளை முருகன், சாலிவர்மா, பிராப்தி பஜாஜ், டாக்டர்கள் நம்பி, வாசுதேவன், ஜெயகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..