3 -வது உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு -2025, புதுச்சேரி புதுவைத் தமிழ் சங்கத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவை பறம்புமலை தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் நடராசன் தலைமையில், உலக சாதனையாளர் செ.வெங்கடேசன் வடிவமைத்த “திருக்குறளே தேசிய நூலை”, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி. முத்து வெளியிட புதுச்சேரி பேராசிரியர் முனைவர்
உரு. அசோகன் பெற்றுக்கொண்டார், நூல் அறிமுகத்தை வேலூர் சாதனையாளர் சி. கலைவாணி எடுத்துரைத்தார். நூலில் ஒரு கட்டுரையை நமது திருப்பூர் முத்தமிழறிஞர் டாக்டர் சி. சிவானந்தம் எழுதி, சிறப்பு செய்தமைக்கு அவருக்கு “திருக்குறள் ஆய்வுச் சிற்பி” விருதும், சான்றிதழையும் வழங்கி கௌரவப் படுத்தினார்கள். அருகில் தாய் பேச்சியாயி, தந்தை சின்னத்தம்பி மற்றும் முனைவர் ஏகலைவன் வேலூர் முத்தமிழ் சங்கம், முனைவர் இளங்குமரன் தேனி வையைத் தமிழ்ச்சங்கம், முனைவர் ம. சக்கரவர்த்தி, முனைவர் குமரிச்செழியன் புதுச்சேரி திருக்குறள் சமுதாய மையம். ஆகியோர் பாராட்டினார்கள்.