மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி, அப்பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அதே தெருவில் கதிரவன் என்ற நபர் சிறுமியை அவரது அப்பா அழைப்பதாக தெரிவித்து, தவறாக நடக்க முயற்சி செய்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் வந்து பார்த்த நிலையில் கதிரவன் தப்பித்து ஓடி விட்டார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் கதிரவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி விஜயகுமாரி குற்றம் சாட்டப்பட்ட கதிர்வனுக்கு சிறுமி பாலியல் தொந்தரவு மற்றும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தலா பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் இராம சேயோன் ஆஜரானார்.
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics