சுசீந்திரம் மே 1
கன்னியாக்குமரி மாவட்ட எஸ்.பி. டாக்டர் R ஸ்டாலின் IPS அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிக்கரமாக செயல்படுகிற திட்டம் குறித்து கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களிடம் நிருபர்கள் கேட்கும் போது கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள் அதில் இதுவும் ஒன்று மேலும் அவர் கூறும் போது
- பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல்
- பொதுமக்களுக்கு தேவையான காவல் பணி செய்தல்
- பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையே நட்புறவு ஏற்படுத்துதல்
- ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக காவலர்களை நியமித்து பொறுப்புகளை வழங்குவதன் மூலம் காவலருக்கு அதிகாரம் அளித்தல்
- அனைத்து காவலர்களுக்கும் பணியினை பகிர்ந்து கொடுப்பதன் மூலம் பணி சுமையை குறைத்து காவல் பணியை மேம்படுத்துதல்
- நியமிக்கப்பட்ட காவலர்கள் கிராமங்களில் பொதுமக்களுடன் இணைந்து சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
நியமிக்கப்பட்ட காவலரின் பணிகள்
- வாரத்திற்கு மூன்று முறை தான் நியமிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும்
- காவல்துறையின் முன்னெடுப்புகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல்
- நீதித்துறை மற்றும் காவல் நிலையத்தின் அழைப்பானைகளை (Summons) வழங்குதல்
*’நீதிமன்ற பிடியாணையை (NBW) நிறைவேற்றுதல்
- அரசு தனியார் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் நன்னடத்தையே சரிபார்த்தல்
- சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்தல்
- வங்கிகள், நகைக்கடைகள், வெளியூர் சென்றவர்களின் பூட்டப்பட்ட வீடுகள், வழிபாடு தளங்கள், மதுபான கூடங்கள் மற்றும் இரவு நேர உணவகங்களை கண்காணித்தல்
- சைபர்கிரைம், போக்குவரத்து விதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்துவது என தெரிவித்தார்