கிருஷ்ணகிரி ஏப்30
கிருஷ்ணகிரி, பர்கூர் தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் புளியம்பட்டி சமுதாய கூடத்தில் தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டும், புதிய உறுப்பினர் சேர்க்கைகான அடையாள அட்டையை பெற்றுக் கொண்டும் சென்றனர்.
பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கே.ஆர்.சின்னராஜ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்,
பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமில் அதிகப்படியான உறுப்பினர் சேர்க்கை செய்பவர்களுக்கு தகுந்த பரிசும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினரை சேர்க்கும் ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகளுக்கு கழகப் பொதுச் செயலாளர் அண்ணியார் கரங்களால் தங்க மோதிரம் வழங்க இருப்பதாகவும், பெருமையுடன் தெரிவித்தார்.
புளியம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாவட்ட அவைத்தலைவர் எல்.முருகன், மாவட்ட பொருளாளர் வி.லட்சுமணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அத்திகனூர் ஏ.கே.வேலு, பர்கூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி.திருநாவுக்கரசு, காவேரிப்பட்டினம் ஒன்றிய கழகச் செயலாளர் விஜய்வல்லரசு, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.முருகன், மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி, பர்கூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.ஆர்.பழனி, ஒன்றிய பொருளாளர் ஜி.டி.பால்ராஜ், ஒன்றிய துணை செயலாளர்களான டி.என்.குமார், சின்னசாமி, குதாரத், புளியம்பட்டி ஊராட்சி கழகச் செயலாளர் மணிவண்ணன், பண்டசீமனூர் ஊராட்சி கழகச் செயலாளர் சக்தி, மாவட்ட தொழில் சங்க நிர்வாகி ஜான்பாஷா, கிளைக் கழகச் செயலாளர் சிவக்குமார், கிளை நிர்வாகிகளான பாபுராஜ், சக்திவேல், வேடியப்பன், தங்கவேல், சசிகுமார், பழனி, மகளிர் அணி நிர்வாகிகளான எஸ்.மகேஸ்வரி, விஜயா, கமலா, உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்