காஞ்சிபுரம் ஏப்ரல் 23
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகனிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஓஎச்டி ஆப்ரேட்டர் வரதராஜ் கோரிக்கை மனு ஒன்றை மனு அளித்தார்.
அந்த மனுவில் தான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். வெங்காடு பஞ்சாயத்தில் ஓஎச்டி ஆப்ரேட்டராக வேலை செய்து வருவதாகவும், நேற்று மாலை 5 மணி அளவில் கருணாகரச்சேரி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து கிணற்றிலிருந்து மோட்டார் இயக்குவதற்கு சென்றபோது வழியில் புதிதாக ஒரு தனியார் கம்பெனி ஒன்று கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றது. அதனை நானும் கருணாகரச்சேரி கிராம பொதுமக்களும் மேற்படி புதிய கம்பெனி கட்டுவதற்கு வேலை செய்வதற்கு பொது வழியை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வெங்காடு 5 வது வார்டு உறுப்பினரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினார்,
இதனைத் தொடர்ந்து அங்கு திடீரென்று வந்த வார்டு உறுப்பினரும் மற்றும் அவருடன் வந்தவர்களும் எங்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மனுவில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.