சுசீந்திரம்.ஏப்.22
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன் புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சார்ந்தவர் ராமசாமி பிள்ளை என்பவரது மகன்கள் இசக்கியப்பன் 44 சுடலை யாண்டி 39 ஆகியோர் அண்ணன் தம்பி சுடலை யாண்டி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் இசக்கியப்பன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் சுடலை யாண்ட்டிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவே வீட்டினை இசக்கியப்பன் பெயருக்கு மாற்றி தர வேண்டுமென இசக்கியப்பன் அடிக்கடி சுடலை யாண்டியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நல்ல குடிபோதையில் வந்த இசக்கியப்பன் சுடலை யாண்டியை பார்த்து வீட்டை என் பெயரில் எழுதி தா என கேட்டுள்ளார் இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் சுடலை யாண்டியை தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது தம்பியான சுடலை யாண்டியை தாக்கி உள்ளார் இதில் காயம் அடைந்த சுடலையாண்டி கதறி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர் உடனடியாக கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து இசக்கியப்பன்தப்பி சென்றுள்ளார். இது குறித்து தம்பிசுடலை யாண்டி அண்ணன் இசக்கியப்பன் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தார் புகார் அளித்தார் சுசீந்திரம் காவல்துறையினர் இசக்கியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர் சொத்துக்காக தம்பியை குத்திய அண்ணனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது