காஞ்சிபுரம், ஏப்ரல்: 21
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் பொதுமக்களின் உடல் வெப்பம் மற்றும் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வருகின்றனர்.
அவ்வகையில், தமிழக வெற்றி கழகம் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் வயலக்காவூர் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம், உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம் சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா, நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு ன, த.வெ.க உத்திரமேரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.பி.டி.கே ராஜசேகர் தலைமையேற்றார். உத்திரமேரூர் வடக்கு ஒன்றிய நிர்வாகி சேதுபதி முன்னிலை வகித்தார்.
இதில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு, தர்பூசணி, ஜுஸ், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், வயலக்காவூர் த.வெ.க நிர்வாகிகள் பரந்தாமன், துலுக்காணம், சாந்தகுமார், அரவிந்த், ராஜசேகர், பாலாஜி, ரத்தினகுமார், விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.