ஆரல்வாய்மொழி ஏப் 21
கல்கத்தாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனைக்காக வைத்திருந்த 230 கிராம் கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சைமால் தலைமையிலான தனிப்படையினர் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா பற்றிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் ஆரல்வாய்மொழி குருசடி பகுதி சேர்ந்த சேர்ந்த ஜான் பெஞ்சமின் (37) என்பவர் பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விற்பனை செய்ய வைத்திருந்த 230 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் போதை பாதையை தவிர்த்து குமரி மாவட்ட காவல்துறையால் வழிகாட்டப்பட்டுவரும் வெற்றி பாதையில் பயணித்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.