பரமக்குடி,ஏப்.19: பரமக்குடி நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரம் நடுவிழா மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உயர் நீதிமன்றம் மரம் வளர்ப்பது அவசியம் குறித்து அனைத்து நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இதன் அடிப்படையில், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக, பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் மரம் நடுவிழா மற்றும் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பரமக்குடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார். பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகளான கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, சார்பு நீதிபதி சதீஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பாண்டிமகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரம்வளர்ப்பின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் பசுமலை, இளங்கோவன் ஆகியோர் சட்டப்பணிகள் குழு ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் சட்ட பணிகள் பேசினர். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பூமிநாதன் , செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் பரமக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணன் நன்றி கூறினார்.
பட விளக்கம்
பரமக்குடி அருகே திணைக்குளம் கிராமத்தில் பரமக்குடி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நடைபெற்ற மரம் நடும் விழாவில் நீதிபதிகள மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்