கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட காம்பாய் கடை பகுதியில் உள்ள ஓடையில் சமீப நாட்களாக அப்பகுதியினர் குப்பைகள், மற்றும் கட்டிட கழிவுகளை நீரோடையில் கொட்டி வருகின்றனர் . இதனால் ஓடை தடுக்கப்படுவதோடு அசுத்தமும் ஏற்பட்டு வருகிறது. தூய்மை நகரம் என சிறப.பு தகுதிமெற்ற கோத்தகிரி பேரூராட்சி மூலம் ஒவ்வொரு வருடமும் தூர் வாரப்பட்டு பராமரித்து வரும் நிலையில் பெரும் மழை வெள்ளம் ஏற்பட்டு ஓடை தடுக்கப்பட்டு கழிவு நீர் தேங்கி அப.பகுதி வீடுகளுக்குள் செல்லும் முன் ஓடையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி காம்பாய் கடை பகுதி ஓடையை தூர்வாரி சீரமைக்கப்பட வேண்டும் என அப.பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



