மார்ச்: 31
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி, இடைக்காட்டு வலசில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.97.21 இலட்சம் மதிப்பீட்டில் வீரசோழபுரம் ஊராட்சி வள்ளியரச்சல் வீரசோழபுரம் சாலை முதல் செல்வபுரம் வழியாக பூமாண்டவலசு வரை சாலை வரையிலும் மற்றும் ரூ.86.07 இலட்சம் மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் ஊராட்சி இடைக்காட்டுவலசு முதல் குழலிபாளையம் சாலை வரையிலும் பலப்படுத்தும் பணிகளையும்,
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சி, சாம்பவலசில் முதலமைச்சரின் கிராம் சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.81.54 இலட்சம் மதிப்பீட்டில் என்.ஜி.எம் சாலை முதல் சாம்பவலசு சாலை வரையிலும், ரூ.82.33 இலட்சம் மதிப்பீட்டில் என்.ஜி.எம் சாலை முதல் கல்லமேட்டுப்புதூர் வரையிலும், ரூ.99.38 இலட்சம் மதிப்பீட்டில் மோளபாளையம் சாலை முதல் கரைப்பதூர் சாலை வரையிலும், ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் சிவன்மலை தேர்வீதி சாலை பலப்படுத்தும் பணிகளையும், ரூ.57.27 இலட்சம் மதிப்பீட்டில் என்.ஜி.எம் சாலை முதல் கொள்ளுக்காடு வரையிலும், ரூ.76.91 இலட்சம் மதிப்பீட்டில் கோபி -படியூர் சாலை முதல் படியூர் ஒட்டப்பாளையம் சாலை வரையிலும், ரூ.59.83 இலட்சம் மதிப்பீட்டில் மருதுறை சாலை முதல் பெரியகாட்டு வலசு வரையிலும் என மொத்தம் ரூ.7.64 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப்பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் படியூர் மூர்த்தி தங்கமுத்து செந்தில் முத்துசாமி வள்ளியரசு (எக்ஸ்) தலைவர் குழலிபாளையம் பொன்னுச்சாமி மணி துவக்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் திருப்பூர் சாலையில் தனியார் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், சரவணன் (வெள்ளகோவில்), திருமதி அனுராதா, திருமதி விமலாவதி (காங்கேயம்), உதவி பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, திருமதி மகாலட்சுமி, சரவணக்குமார், முத்துக்குமார் மற்றும் துறையை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.