சிவகங்கை: மார்ச் :22
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ளது புலியால் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பெற்றோர் இல்லாத மாணவ , மாணவியர்களுக்கு விடியல் – என்னும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டது .
பின்பு அனைத்து மாணவ , மாணவியர்களுக்கும் இலவசமாக எழுது பொருட்கள் , மற்றும் மழைக்கோட்டுகள் வழங்கப்பட்டது .
இதில் 100 மாணவ , மாணவிகள் பயன்பட்டனர் . விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி பேசும்போது:
மாணவிகளுக்கு ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் . குட்.. டச் , மற்றும் பேடு,டச் என்று உள்ளது . மாணவிகளை யாரேனும் பேடு,டச் அதாவது தவறான நோக்கில் தொட்டால் அவர்கள் நண்பர்கள் மூலமாகவோ அல்லது ஆசிரியர்கள் மூலமாகவோ அல்லது பெற்றோர்கள் மூலமாகவோ காவல் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் . அப்போதுதான் பாலியல் குற்றங்கள் குறையும் என்று பேசினார் . இதனைத் தொடர்ந்து விடியல் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.எம். ரோணிக்கா பேசும்போது மாணவ , மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தற்போது நகர் பகுதிகளில் போதைப் தொடர்பான பொருட்கள் எளிதாக கிடைக்கிறது .
எனவே மாணவர்கள் விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பேசினார் . நிகழ்வின் தொடக்கத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வரவேற்றுப் பேசினார். விழாவின் நிறைவில் விடியல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் பா.லீமாரோஸ் நன்றி கூறினார் .