சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்படத்தில் தேவகோட்டை வட்டளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம் – தென்னை மற்றும் காய்கறி சாகுபடி ஆகியவைகளுக்கான இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், வழங்கினார். உடன் இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலெட்சுமி, துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



