திருவட்டார், மார்- 20-
திருவட்டார் அருகே கொல்லம் விளைபகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (50). அதே பகுதியை சேர்ந்தவர் சில்வான்ஸ் ( 40). இரண்டு பேரும் ஒன்றாக கேரளாவில் தங்கி தேன் பெட்டி தொழில் செய்து வந்துள்ளனர். தற்போது சொந்த ஊரில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சில்வான்ஸ், சுகுமாரனிடம் கடனுக்காக பணம் கேட்டுள்ளார். சுகுமாரன் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சில்வான்ஸ் அந்த பகுதியில் கடந்த ஒரு கல்லை எடுத்து சுகுமாரனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுகுமாரன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் சில்வான்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.